செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் 'தரவு' என்பது பெட்ரோலை விட சக்திவாய்ந்த ஆயுதம் என்று மக்களவை பட்ஜெட் விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்கா தனது வல்லரசு தன்மையை தக்கவைக்க இந்தியாவின் தரவுகளை எதிர்பார்க்கிறது என்றும், டிரம்ப் அரசுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் தரவுகளை அடகு வைத்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவிற்கு விற்பதற்கு சமம் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.