கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்காக போராடிய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதில், இந்தியாவின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய அசாத்தியமான துணிச்சல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நாடு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது என்றார். மிகக் கடினமான சூழல்களிலும் அவர்கள் வெளிப்படுத்திய வீரம் தேசத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்றும், அவர்களின் தேசபக்தி எதிர்கால தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.