விண்வெளியில் இருந்து 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நீங்கள் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் நீங்கள் எங்களின் மனதில் எப்போதும் இருப்பீர்கள். உங்கள் சாதனைகளை நினைத்து பெருமை கொள்ளும் 140 கோடி இந்தியர்களும் உங்கள் நலனுக்காக பிராத்திக்கிறார்கள். பூமி திரும்பியபின் இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.