பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு இஸ்ரேலிய நாடாளுமன்றம் (நெசெட்) மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை (பிப்., 26) மோடி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். மேலும் தி ஜெருசலேம் போஸ்ட் அதன் முதல் பக்கத்தில் பிரதமரின் செய்திகளை வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல் பயணத்திற்குப் பிறகு பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இதுவாகும்.