குழந்தைகளை மூளைச்சலவை செய்யும் நோக்கில் பி.எம்.ஸ்ரீ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரியங்காவின் கருத்து அறியாமை மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது. சீர்திருத்தங்களை ஏற்பதில் சிலருக்கு சிக்கல் இருக்கிறது. அதுவே வெற்றியை ஒப்புக்கொள்ள தடுக்கிறது. தேசத்தின் பாரம்பரியத்தில் பெருமையை கொண்டு குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதே சிந்தாந்தம் என கூறினார்.