நாளை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

3807பார்த்தது
நாளை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (மே 19) காலை 10:00 மணிக்கு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கான அறிவிப்பை பாமக வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ளார். தேர்தல் அடுத்தகட்ட பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து இந்த முக்கிய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி