2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாமக குழு அமைத்துள்ளது. அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஸ்ரீகாந்தி, சையத் மன்சூர் உசேன் மற்றும் அருள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். பிற அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து, தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து இக்குழுவினர் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.