அதிமுக கூட்டணியில் பாமக.. திடீர் சந்திப்பு

35பார்த்தது
அதிமுக கூட்டணியில் பாமக.. திடீர் சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவுக்கு எதிர் கூட்டணி என அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கும் நிலையில், அது அதிமுகவா? தவெகவா? என உறுதியாக சொல்லவில்லை. இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதன் மூலம் அதிமுகவுடன் பாமக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.