இபிஎஸ் உடன் பாமக MLA அருள் சந்திப்பு

3பார்த்தது
இபிஎஸ் உடன் பாமக MLA அருள் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக (ராமதாஸ்) தரப்பு எம்எல்ஏ அருள் இன்று (பிப்., 17) சந்தித்து பேசியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாமக (அன்புமணி) தரப்பு ஏற்கனவே அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்துவிட்டது. ராமதாஸ் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அவரது ஆதரவாளரான அருள் இபிஎஸ்-ஐ இன்று சந்தித்துள்ளார். இதன் மூலம் ராமதாஸ் தரப்பும் கூட்டணியில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி