பாமக தலைவர் பதவி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று (ஜூன் 5) அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்துக்கு மகளுடன் வந்தார். சுமார் 1 மணிநேரம் கட்சியின் நிறுவனரும், தந்தையுமான ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான முடிவும் எட்டப்படாத காரணத்தால், அன்புமணி ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றார் என கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே சமாதான முயற்சி தோல்வி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.