சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லை. அன்புமணி தரப்பு பாமக அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று (ஜன.14) செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஊடகத்திற்கு அறிவிக்கப்படும்” என்றார்.