கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகே போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த முகமது அதினான், தன் மீது புகாரளித்த பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது தடுக்க வந்த மற்றொரு நபருக்கும் கத்திக்குத்து விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் முகமது அதினானை மீண்டும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.