முட்டை பொரியலில் விஷம்.. மகளை கொல்ல முயன்ற தாய்

3643பார்த்தது
முட்டை பொரியலில் விஷம்.. மகளை கொல்ல முயன்ற தாய்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த முனுசாமி, மல்லிகா (47) தம்பதி. இவர்களின் மகள் குறிஞ்சி (20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், திருவள்ளூரை சேர்ந்த இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் குறிஞ்சிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மல்லிகா, காதலை கைவிடக் கூறியுள்ளார். அதற்கு மறுத்த குறிஞ்சிக்கு முட்டை பொரியலில் விஷம் வைத்துள்ளார். இதனை சாப்பிட்ட குறிஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மல்லிகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி