செப்டம்பர் மாத இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 1 முதல் 7 வயது வரையிலான 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். அவர்கள் இருமல் நோய்க்கு 'கோல்ட்ரிப்' மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. இந்த மருந்து காஞ்சீபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா கம்பெனியில் தயாரிக்கப்பட்டது. அதில் உயிர்கொல்லி ரசாயனம் 48 சதவீதத்திற்கும் அதிகமாகக் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மருந்து கம்பெனியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.