தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரிடம் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன், கருணாநிதி, வினோத் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து ரூ.2.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. தற்போது 3 பேரிடமிருந்தும் சுமார் ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.