உத்தரப் பிரதேச மாநிலத்தில், சாலையை கடக்கும் சிறுமிகளிடம் அத்துமீறிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையைக் கடந்து சென்ற சிறுமிகளின் பின்புறத்தை தொட்டுள்ளனர். இது, அவர்களது பின்னால் சென்ற வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ வைரலான நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.