டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை செய்தியாக சேகரித்த 3 பெண் பத்திரிகையாளர்களிடம் போலீசார் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்டத்தின்போது பெண் போலீசார் இல்லாமல் ஆண் போலீசார் பெண்களை கைது செய்ததாகவும், அப்போது பத்திரிகையாளர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான 3 புகார்களையும் டெல்லி போலீசார் குற்றப்பிரிவுக்கு மாற்றி, நியாயமான விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.