சமவேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராடி வருகின்றனர். இந்நிலையில், சிறுவனை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்ததற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறுவன் மீது காவலர்கள் தங்களது பலத்தை பிரயோகிப்பது ஏன்? என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.