பாலியல் புகாருக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் மீது வந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.