கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்திற்கு இன்று (டிச.13) வந்த அவரை காண ரூ.5,000 முதல் ரூ. 25,000 வரை ரசிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மைதானம் வந்தடைந்த அவர் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றுவிட்டதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதயடுத்து, போலீசார் தடியடி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.