மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவின் இல்லத்திற்கு, சமூக ஊடகங்களில் சிஜேபி (CJP) விவகாரம் பிரபலமாகி வருவதை அடுத்து 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டின் முன்பு தேவையற்ற கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த அதிரடி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் துணை ஆணையர் பங்கஜ் அதுல்கர் தெரிவித்துள்ளார்.