மேட்டுப்பாளையம் - போத்தனுர் இடையேயான ரயிலில் தனது 2 வயது குழந்தையுடன் பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது அந்த குழந்தையின் தொண்டையில் மிட்டாய் சிக்கியதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இந்நிலையில், அதே ரயிலில் இருந்த ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு, அந்த மிட்டாயை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.