காவல் மரணம்.. ஆகாஷின் உடல் 102 நாட்களுக்குப் பின் தகனம்

3088பார்த்தது
காவல் மரணம்.. ஆகாஷின் உடல் 102 நாட்களுக்குப் பின் தகனம்
மானாமதுரையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஆகாஷின் உடல் 102 நாட்களுக்குப் பின் இன்று (ஜூன் 17) மதுரையில் தகனம் செய்யப்பட்டது. மகனின் மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்யக் கோரி ஆகாஷின் பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஆகாஷ் உடலுக்கு அரசே இறுதிச்சடங்குகள் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவிட்டது. அதனடிப்படையில் இன்று காலை, உடலை எடுத்துச் சென்றபோது போலீசை தடுத்த ஆகாஷின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். பின் ஆகாஷின் உடல் உரிய மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி