ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர் சஸ்பெண்ட்

0பார்த்தது
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் உணவகம் செயல்பட்டதாக கூறி, காவலர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருந்த காவலர் மோகன்குமார் என்பவர், கடையை மூடுமாறு வலியுறுத்தி உணவக உரிமையாளரிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, காவலர் மோகன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி