இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நாட்டின் மிக சிறந்த கவிஞராகவும் கூர்மையும் நயமும் மிக்க பாஜகவின்
அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். தனது சிறந்த பேச்சாற்றலாலும் தொலைநோக்கு பார்வையினாலும் இந்திய அரசியலில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை அவர் பதித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனை, தங்க நாற்கர சாலை திட்டம் போன்ற சிறப்புமிக்க முடிவுகளின் மூலம் இந்தியாவை வல்லரசு பாதையில் வழிநடத்திய பெருமை அவருக்கு உண்டு.