பி.கே.மூக்கையா தேவர் (1923-1979), பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்
அரசியல் வாரிசாக, ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக விளங்கியவர். இவர் உசிலம்பட்டி தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 6 முறையும், ராமநாதபுரம் தொகுதியில் இருந்து ஒரு முறையும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியுள்ளார். கச்சத்தீவு உரிமை மீட்புப்
போராட்டம் போன்ற பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க கல்வி நிலையங்கள் அமைப்பதிலும் முக்கியப் பங்காற்றினார்.