பொங்கல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என ரயில்வே போலீசார் 'ஆபரேஷன் ஜான் ஜாக்ரன்' என்ற பெயரில் இன்று (ஜன., 10) சோதனை நடத்தினர். பெரம்பூர், கடற்கரை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களிலும் சோதனை நடைபெற்றது. பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.