பொங்கல் சிறப்பு தொகுப்பு? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!

6285பார்த்தது
பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வரும் வாரத்தில் வெளியிடுவார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். வேளாண்துறையுடன் இணைந்து கரும்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்" என தகவல் அளித்துள்ளார்.

நன்றி: News Tamil 24x7