ஒரு காலில் நின்று உறங்கும் பூநாரை: காரணம் என்ன?

34பார்த்தது
ஒரு காலில் நின்று உறங்கும் பூநாரை: காரணம் என்ன?
நீண்ட கால்களையும் வளைந்த அலகுகளையும் கொண்ட 'பூநாரை' பறவைகள், அவை உண்ணும் நண்டுகள் மற்றும் பாசிகளில் உள்ள கரோட்டினாய்டு சத்து காரணத்தினாலேயே தங்களின் இறகுகளில் அழகான இளஞ்சிவப்பு நிறத்தை பெறுகின்றன. தன் உடலின் வெப்பத்தை நிலைநிறுத்தவும் ஆற்றலை சேமிக்கவும் ஒரு காலில் நின்றபடி உறங்கும் இந்த பறவைகள், குஞ்சுகளுக்கு தங்களின் தொண்டை பகுதியில் இருந்து சிறப்பு பாலை சுரந்து ஊட்டுகின்றன. ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் பழக்கத்தை பூநாரைகள் கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்தி