சென்னை: திருமண மறுவீட்டு நிகழ்ச்சிக்காக வாங்கப்பட்ட பக்கெட் பிரியாணியில் இறந்துபோன பூரான் இருந்ததாக எழுந்த புகாரில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.1.05 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், உணவின் தரக்குறைவு மற்றும் சேவையில் அலட்சியம் இருந்ததாகக் கருதிய நீதிமன்றம், பெரம்பூரில் செயல்படும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடை இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.