திருப்பதி அன்னதான மையத்தில் பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் பூரான் இருந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த சந்து என்ற பக்தர் வீடியோ ஆதாரத்துடன் திருப்பதி தேவஸ்தான அதிகாரியிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் விசாராணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என பக்தர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.