போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்.. வெளியான புதிய தகவல்

2447பார்த்தது
போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்.. வெளியான புதிய தகவல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான உள்ளதாக வாடிகன் தேவாலயம் அறிவித்துள்ளது. இதனால் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர். 88 வயதான போப் பிரான்சிஸ், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களாக மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சுவாசப் பிரச்சனை இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்.