துபாயைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சரும், புகைப்பட கலைஞருமான அனுனே சூட் (32) இன்று காலமானார். அவரது மறைவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும், யூடியூப்பில் 3.8 லட்சம் சப்ஸ்க்ரைபர்களையும் கொண்ட அனுனே சூட், ட்ராவல் விலாக் உள்ளிட்ட வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அவரது மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.