பிரபல தமிழ் சீரியல் நடிகை பத்மாக்கா (48) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று (பிப்.4) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் பத்மாக்கா நடித்துள்ளார். குறிப்பாக, தெலுங்கு சீரியல்களில் வில்லியாக நடித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். இவரது மறைவுக்கு சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.