மத்திய அரசால் நாடு முழுவதும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000, நான்கு மாதங்களுக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தவனைத் தொகை ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. தொகை உயர்த்தப்பட்டால் நான்கு மாதங்களுக்கு ரூ.4000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 கிடைக்கும்.