தமிழ்நாட்டில் கூடுதல் காவலர்கள் தேவைப்படும் நிலையில் நடப்பாண்டுக்கான காவலர் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைத்திருப்பது கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தேர்வுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது X சமூக வலைத்தள பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.