மேற்கு ஆசியப் போர் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்தையே பாதித்து வருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக ஐநா வளர்ச்சித் திட்ட அறிக்கை எச்சரிக்கிறது. இதனால் நாட்டின் வறுமை விகிதம் 24.2% ஆக உயர்ந்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 35.4 கோடியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு குறைவு, விலை உயர்வு போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.