சென்னை பாலவாக்கம் பகுதியில் 7 மணி நேரம் நீடித்த கடுமையான மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 50 நாட்களாகவே இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் மின்தடையால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். பல மணி நேரமாகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடினர்.