தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மின்வெட்டு பிரச்சனை இருப்பதாக
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “சென்னை மற்றும் மதுரையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல நீண்ட நேரம் பேருந்துகளுக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை. ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் நடந்தேறிய அவலங்கள் தவெக ஆட்சியிலும் அலங்கோலங்களாக தொடர்ந்து வருகிறது. 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மாற்றமல்ல மிகப்பெரிய ஏமாற்றம்” என்றார்.