மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.