மதுரை மாவட்டம், மேலக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தவெக எம்எல்ஏ கருப்பையா நேற்று (மே 22) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின்தடை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால், அவர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த மரத்தடியில் நாற்காலிகளைப் போட்டுத் தனது ஆய்வை மேற்கொண்டார். தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.