சோழவந்தானில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை.. மக்கள் அவதி

7பார்த்தது
சோழவந்தானில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை.. மக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தானில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதே இதற்குக் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேர மின்தடையால் குடிநீர் விநியோகம், வணிக நிறுவனங்கள் மற்றும் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்விநியோகத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி