மியான்மரில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

35பார்த்தது
மியான்மரில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் நேற்று (பிப்.3) இரவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் வங்கதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டுள்ளன. மியான்மரின் அக்யாப் நகருக்கு கிழக்கே 70 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அலறியடித்து ஓடியதாக கூறப்படுகிறது. மேலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி