சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்

30பார்த்தது
தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள லியூசோ நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு, சுமார் 13 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாதுகாப்பு கருதி 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிலநடுக்க சம்பவங்களில் 4 பேர் காயமடைந்தனர், 2 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி