12 நிமிட இடைவெளியில் மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த நிலநடுக்கம் இந்தியாவின் வடமாநிலமான உத்தரகாண்ட்டில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை.