மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இப்படம், வரும் பிப்.6-ம் தேதி முதல் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.