அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்.23 முதல் 28 வரை நடைபெறும். தேர்வுகள் தினமும் காலை 9–11 மணி மற்றும் பிற்பகல் 2–4 மணி என இரண்டு வேளைகளில் நடத்தப்படும். அனைத்து பள்ளிகளும் தேவையான ஏற்பாடுகளை செய்து, மாணவர்கள் நேரத்திற்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.