பீகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்த நிலையில், 83 தொகுதிகளில் JDU முன்னிலை வகித்துள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, தேஜ கூட்டணி 191 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் JSP ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் அரசியலில் இருந்து விலகுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.