தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவர், 2015ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தவர். இந்நிலையில், தற்போது தமிழக ஆர்.எஸ்.எஸின் அமைப்பு பொதுச்செயலாளர் பிரஷோப குமார், பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.