'கர்ப்பிணிகள், முதியோர் விஜயைப் பார்க்க வரவேண்டாம்' - செங்கோட்டையன்

1059பார்த்தது
சேலம் மாவட்டத்தில், வருகிற 13ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தின் ஏற்பாடுகளை தவெக நிர்வாகி செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயின் நிகழ்ச்சிக்கு கர்ப்பிணிகள், முதியோர் வரவேண்டாம். தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தினார். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி